Whatsapp Delete Sent Message Feature & அனுப்பிய மெசேஜை டெலிட் செய்வது எப்படி.?

Whatsapp பயன்படுத்தும் நம் அனைவரும் சந்தித்திருக்கும்  முக்கிய சிக்கல் தவறுதலாக நாம் அனுப்பிய மெசஜை நமது மொபைலிலில் மட்டுமில்லாது அனுப்பியவரது மொபைலிலிருந்து டேப்லெட் செய்வது எப்படி என்று.?

நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் தற்போது வந்துள்ள Whatsapp புதிய பதிப்பில் இதற்கான தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதி, நன்மைகள் உபயோகிக்கும் கட்டுப்பாடுகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
முதலில்  உங்கள் மொபைல் playsotore ல்  Whatsapp செயலியை அப்டேட் செய்யவேண்டும் 


அனுப்புனர் மற்றும் பெறுநர் இருவருக்குமே இந்த அப்டேட் கிடைத்த பிறகு தான் இந்த வசதியை உபயோக படுத்த முடியும். இதன் வசதியின் மூலம் ஜிப் (GIF), டெஸ்ட் மெசஜ், வாய்ஸ் மெசேஜ், படங்கள், லொகேஷன் ஆகியவை திரும்ப பெறலாம். (வரும் காலங்களில்), தொடர்பு எண்கள், ஸ்டேட்டஸ் ரிப்ளை போன்ற அனைத்து வகையான மெசேஜ்களையும் திரும்ப பெறலாம்.

இதுவரை இந்த வசதி எப்படி வேலை செய்யும் என்ற அதிகாரபூர்வ வார்த்தைகள் இல்லை. இருப்பினும் இது Gmail Undo போலவே செயல்படும்

(உங்கள் தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.)

இந்த வசதி மொபைலில் இயக்கப்பட்டிருக்கும் போது, ​​நீங்கள் ஒரு குறிப்பிட்ட மெசேஜை திரும்பப்பெறுகையில், வாட்ஸ்ஆப் ஆனது உங்கள் மெசேஜின் நகல் ஒன்றை பெறுநருக்கு அனுப்பும். பெறுநர் ஒரு போலியான நகலைப் பெறுவார். ஆனால் அது சார்ந்த எந்த விதமான நோட்டிபிக்கேஷனையும் பெற மாட்டார், குறிப்பாக அந்த செய்தி அவரின் Chat History-ல் சேமிக்கப்படாது.

 

இந்த அம்சம் ஒரு நேர-உணர்திறன் மிக்க அம்சம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். செய்தியை அனுப்பும் ஏழு நிமிடங்களுக்குள் மட்டுமே செய்திகளை ரீகால் செய்ய முடியும். குறிப்பிட்ட 7 ஏழு நிமிடங்களில் ஒரு செய்தியை நீங்கள் ரீகால் செய்யவில்லையெனில் மறுபடியும் அதை ரீகால் செய்யவே முடியாது.

மேற்கோளிடப்பட்ட (அதாவது குறிப்பிட்ட மெசேஜை தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் ரிப்ளை ) மெசேஜின் கீழ் அனுப்பட்ட மெசேஜை திரும்பப்பெற முடியாது. ஒரு பிராட்காஸ்ட் பட்டியலில் (அதாவது குறிப்பிட்ட நண்பர்களின் எண்களை உள்ளடக்கிய பயனரால் தனிப்பட்ட முறையில் சேமிக்கப்பட்ட பட்டியல்) அனுப்பிய மெசேஜை ரீகால் செய்ய முடியாது. மேற்கூறப்பட்டது போல, 7 நிமிட நேர காலத்திற்குள் ரீகால் செய்யப்படாத எந்தவொரு மெஸேஜையும் டெலிட் திரும்பப்பெற முடியாது. பழைய வாட்ஸ்ஆப் பதிப்பை கொண்டவர்களுக்கும் இந்த அம்சம் வேலைசெய்யும் ஆனால் நிச்சயமாக இந்த அம்சம் சிம்பியன் (Old Nokia Mobiles) இயங்குதளத்தில் வேலை செய்யாது.

இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .

(உங்கள் தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.)


Whatsapp Delete Sent Message Feature & அனுப்பிய மெசேஜை டெலிட் செய்வது எப்படி.? Whatsapp Delete Sent Message Feature & அனுப்பிய மெசேஜை டெலிட் செய்வது எப்படி.? Reviewed by Vengat on October 31, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.