உங்கள் மொபைல் போன் ஹேக் செய்யப்படுகிறதா? தெளிவான அறிகுறிகள் என்னென்னெ?

இப்போது வரும் ஸ்மார்ட் போன்களில் பல புதிய தொழில்நுட்பங்கள் இடம்பெறுகின்றன .  பல புதிய பாதுகாப்பு அம்சங்களை ஸ்மார்ட் போன் வழங்கினாலும் வாடிக்கையாளர்கள் அதனை சரிவர பயன்படுத்துவது இல்லை. மேலும் ஸ்மார்ட் போன்கள் முலமாக இணைய பயன்பாடு அதிகமாகி  வருகிறது இது போன்ற நிலையில் ஸ்மார்ட் போன் ஹேக் செய்ய வாய்ப்புகள் அதிகம்.


அறிகுறி 1.
உங்கள் மொபைல் பொதுவாக அழைப்பு மற்றும் இணையம் பயன்படுத்தாமல் இருக்கும் போதே அதிக சூடாக இருந்தால் அதற்கு காரணம் திரைக்கு பின்னால் உங்களுக்கு தெரியாத ஏதோ ஒரு ஆப் (App) இயங்கிக்கொண்டிருக்கும். இறகு போன்ற நிலையில் உங்கள் மொபைல் ஹேக் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

அறிகுறி 2.
ஸ்மார்டபோன்களில் கால்அழைப்புகள் போது தேவைஇல்லாத சத்தம் அல்லது எதிரொலி போன்றவற்றினால் ஹேக் பிரச்சனைகள் வரும், மேலும் நீங்கள் இருக்கும் இருப்பிடத்தை அடுத்தவர்கள் மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.

(உங்கள் தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.)

அறிகுறி 3.
உங்கள் ஸ்மார்ட் போன் தானாகவே ஸ்விட்ச்ஆப் மற்றும் தானாக டையெல் (Dial)  செய்தால் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படுகிறது.

அறிகுறி 4
சில சமயம் உங்கள் மொபைல் ஸ்விச்அப் செய்ய முடியாது மற்றும் இனைய இணைப்பில் இருந்து துண்டிக்க முடியாது இதற்கு காரணம் திரைக்கு பின்னல் உங்களுக்கு தெரியாத தேவையில்லாத செயலிகள் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே காரணம் இந்த நிலையில் உங்கள் சொந்த தகவல்களை திருட அதிக வாய்ப்புகள் உள்ளது.

அறிகுறி 4
உங்கள் மொபைல் ஐ உபயோகிக்கும் போது அல்லது லாக் செய்து வைத்திருக்கும் போது தேவையில்லாத விளம்பரங்கள் மற்றும் பாலியல் ரீதியான படங்கள் வந்தால் உங்கள் மொபில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக அர்த்தம்.

ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்க செய்யவேண்டியவை.

1. உங்கள் மொபைலில் வங்கி சார்த்த பரிவர்த்தனைகள் மேற்கொண்டால் மொபைல் கட்டாயம் அன்டிவைரஸ் ப்ரோக்ராம் (Program) நிறுவி கண்கணிக்க வேண்டும். (சிறந்த மற்றும் மலிவான Android Antivirus Program Link உங்களுக்காக Best Android Antivirus.)

2. தொடர்ச்சியாக மென்பொருள் அப்டேட் செய்யவேண்டும். காரணம் மொபைல் நிறுவன தனது மென்பொருளில் ஏதேனும் குறைகள் அல்லது பாதுகாப்பு அம்சங்களை அப்டேட் வழியாக நமது மொபைல்க்கு வழங்கும்.

3. தேவையில்லாத இனைய பயன்பாடுகளையும் நம்பகமில்லாத மொபைல் செய்யலிகளையும் பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவேண்டும்

4. PlayStore ல் அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்யும் முன் அதன் தன்மை மற்றும் பாதுகாப்பானதா என்று உறுதிபடுத்தி கொள்ளவேண்டும்.

5. நமது மொபைலில் பயன்படுத்தும் ஈமெயில் மற்றும் பிற செயல்பாடுகளுக்கு எளிதில் கடுபிடிக்க முடியாதவாறு கடவுச்சொல் உருவாக்க வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் நமது மொபைல் மற்றும் அது சார்த்த தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

(உங்கள் தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.)
உங்கள் மொபைல் போன் ஹேக் செய்யப்படுகிறதா? தெளிவான அறிகுறிகள் என்னென்னெ? உங்கள் மொபைல் போன் ஹேக்  செய்யப்படுகிறதா?  தெளிவான அறிகுறிகள் என்னென்னெ? Reviewed by Vengat on October 31, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.