History of Computer Technology in Tamil - கணினி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆரம்பம் முதல் இன்றுவரை..!

 ஆதிகால மனிதன் சக்கரத்தை கண்டுபிடித்த பிறகே மனித நாகரிகம் மிகவும் வேகமாக வளர்ந்தது. அதன் பிறகு அசாத்தியமான கண்டுபிடிப்பு என்றால் அது கணினியாக தான் இருக்கமுடியும்.


பறந்து விரிந்த உலகத்தை நம் உள்ளங்கையில் அடங்கியது கணினி தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியே காரணம் என்றால் அது மிகையாகாது.

தற்கால மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள் அனைத்துக்கும் கணினி முக்கிய காரணமாக பயன்பட்டுக்கொண்டிருக்கிறது.

இன்றய நவீன கணினியின் முன்னோடி அபாகஸ்என்ற சீனர்கள் பயன்படுத்தி வந்த மணிச்சட்டம் தான். சீனர்கள் கணக்கிடுவதற்காக அபாகஸ் என்ற அமைப்பை பயன்படுத்தினர்.

ஆரம்ப காலத்தில் கணினி என்ற ஒன்றை உருவாக்க யாரும் ஆராய்ச்சிகள் செய்யவில்லை. நல்ல கணக்கிடும் கருவி ஒன்றை தான் உருவாக்க ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர்.

இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்கவர்கள் என்று பார்க்கையில் லீபின்ட்ஸ் என்ற கணிதமேதை உருவாக்கிய கணக்கிடும் இயந்திரம் முதல் கணக்கிடும் இயந்திரமாக இருந்தது. பின்னர் சார்லஸ் பாபேஜ் என்பவர் உருவாக்கிய கணக்கிடும் கருவி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இவரின் கருவியில் துளையிடப்பட்ட பயன்படுத்தப்பட்டன.

உதாரணமாக இரண்டையும் மூன்றையும் கூட்டவேண்டும் என்றால் ஒரு அட்டையில் இரண்டு துளையும் மற்றொன்றில் மூன்று துளையிட்டு இயந்திரத்தினுள் செலுத்தினால் அதன் கூட்டாக ஐந்து துளையிட்ட அட்டை பதிலாக கிடைக்குமாறு சார்லஸ் பாபேஜ் உருவாக்கியிருந்தார். இவரே தற்கால கணினிகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

(உங்கள் கருத்துக்கள் மற்றும் கணினி தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்களை  கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.) 

இவ்வாறு குறைந்த பயன் தரும் கனைத்தும் இயந்திரங்கள் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவு பெரிதாக இருந்தது. இதன் அடுத்த கட்ட வளர்ச்சியின் போது இயந்திரத்தின் வேகம், செயல்திறன் மற்றும் அளவு படிப்படியாக குறைய தொடங்கியது. இம்முறையில் நிகழ்ந்த மாற்றங்களை கணினி வல்லுநர்கள் கம்ப்யூட்டர் ஜெனரேஷன் என்று அழைத்தனர். கணிப்பொறியின் தலைமுறை ஐந்தாக பிரிக்க்கப்பட்டுள்ளது.

முதல் தலைமுறை கணினி.


1946 முதல் 1959 வரையிலான கணினிகள் முதல் தலைமுறை கணினி என்று அழைக்கப்பட்டன. இவை வெற்றிட குழாய் எனப்படும் வேக்கம்டுயூப் மூலம் இயங்கின. அமைப்பில் மிக பெரிதாகவும், அதிக திறன் வாய்ந்த மிசார இணைப்பும் தேவைப்பட்டன. மேலும் அதிக இரைச்சலை உருவாக்கிய இவை இயங்க மிகப்பெரிய ஏ.சிக்கள் (குளிர்சாதனம்) தேவைப்பட்டன. எனினும் மெஷின் லெவல் லாங்குவேஜ் (Machine Level Language) எனப்படும் புரிந்துகொள்ள கடினமான இயந்திர மொழியிலேயே அவை இயங்கின.

இரண்டாம் தலைமுறை கணினி.


1959 முதல் 1965 வரையிலான கணினிகள் இரண்டாம் தலைமுறை கணினிகள் என்று அழைக்கப்பட்டன. வேக்கம்டுயூப்-க்கு பதிலாக ட்ரான்ஸிஸ்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் உள்ளக நினைவகம் எனப்படும் கோர் மெமரி தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டது. முதல் தலைமுறை கணிப்பொறிகளை விட கிக திறன் கொண்டவையாக இருந்தது. ஆப்ரேட்டிங் சிஸ்டம் எனும் இயங்குதள மென்பொருள் உருவாக்கப்பட்டு இரண்டாம் தலைமுறை கணினிகளில் பயன்படுத்தபட்டது. மெஷின் லெவல் லாங்குவேஜ் (Machine Level Language) மற்றும் அசெம்பிலி லெவல் லாங்குவேஜ் (Assembly Level language) இயந்திர மொழியில் இயக்கப்பட்டன.


மூன்றாம் தலைமுறை கணினி. 



1965 முதல் 1971 வரையிலான கணினிகள் மூன்றாம் தலைமுறை கணினிகள் ஆகும். வேக்கம்டுயூப் மற்றும் ட்ரான்ஸிஸ்டர்களை கடந்து இந்த வகை கணினிகளில் ஐ.சி எனப்படும் இன்டகிரேடட் சர்க்யூட் தொழில்நுட்பம் பயன்படுத்தபட்டது. முந்தய தலைமுறை கணினிகளை விட அதிக செயல்திறன் கொண்டதாகவும், குறைந்த மிசாரம் தேவைப்படுவதாகவும், குறைந்த இடம் போதுமானதாகவும் இருந்தது. இந்த காலகட்டத்தில்தான் ஐ லெவல் லாங்குவேஜ் (I Level Language) என்ற நவீன பயன்பட்டு இயந்திர மொழி அறிமுகம் செய்யப்பட்டது.

நான்காம் தலைமுறை கணினி.


1971 முதல் தற்போதுவரை உள்ள நவீன கணினிகள் நான்காம் தலைமுறையை செய்தவையே. மைக்ரோ ப்ரஸ்ஸர்களின் (Micro Processor) அதிவேக செயல்பாடே இந்த தலைமுறை கம்யூட்டர்களை அதிக திறன் கொண்டதாகவும் பல்வேறு தகவல்களை சேகரிக்கவும், தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் தகவல் தொழில்நுட்ப புரட்சியும் இன்றய கணினிகளின் பயன்பாட்டை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. கால்பந்தாட்ட மைதானம் அளவில் இருந்த கணினி தற்போது கைக்கடிகாரம் அளவிற்கு சிரியதகவும் பலமடங்கு திறன் கொண்டவையாகவும் உள்ளன. இன்றய உலகில் நாம் காணும் அனைத்து கணினிகளும் நான்காம் தலைமுறை கணிப்பொறி வகையே ஆகும். 

ஐந்தாம் தலைமுறை கணினி.



ஐந்தாம் தலைமுறை கணினிகள் இன்றுவரை ஆராய்ச்சி கட்டத்தில் தான் உள்ளது. இன்றய அதிநவீன கணினிகளை காட்டிலும் இவை வேகத்தில்லும் தொழில்நுட்பத்திலும்  சிறந்தவையாக இருக்கும். இந்தவகை கணினிகளுக்கு கீபோர்டு மற்றும் மவுஸ் தேவையில்லை. இவ்வகை கணினிகளின் திரை தொடுத்தன்மை (Touch Screen) கொண்டவை. இவ்வகை கணினிக்கு சாப்பிட்டவர் டிரைவ் தேவை இல்லை உங்களுடைய டிஜிட்டல் கேமரா அல்லது ஐபாட் போன்ற சாதனங்களை இதன் திரையில் வைத்தாலே போதும் அதில் உள்ள தகவல்களை எளிதாக தரவிறக்கம் செய்துகொள்ளும். இந்தவகை கணினிகளை சர்பேஸ் கம்ப்யூட்டர்கள் என்று அழைப்பர். மேலும் சுயமாக சிந்தித்து செயல்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினிகளாகவும் இவை இருக்கும். ஐந்தாம் தலைமுறை கணினிகள் சந்தைக்கு வரும்பட்சத்தில் கணினி பயன்பாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்பதில் சந்தேகமில்லை. 

(உங்கள் கருத்துக்கள் மற்றும் கணினி தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்களை  கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.) 
History of Computer Technology in Tamil - கணினி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆரம்பம் முதல் இன்றுவரை..! History of Computer Technology in Tamil - கணினி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆரம்பம் முதல் இன்றுவரை..! Reviewed by Vengat on November 23, 2017 Rating: 5

1 comment:

  1. This post is really nice and informative. The explanation given is really comprehensive and informative..
    தொழில்நுட்பம் Archives - TopTamilNews

    ReplyDelete

Powered by Blogger.