How to Send Large Files by Email Upto 2GB Free - 2GB வரை உள்ள கோப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக எளிமையாக அனுப்புவது எப்படி?

நமது கணினியில் 2GB வரை உள்ள கோப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக எளிமையாக அனுப்புவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

ஈமெயில் சேவை வழங்கும் Yahoo Mail, Gmail, Rediff Mail ஆகிய நிறுவனங்கள் அதிகபட்சமாக 25MB வரையிலான கோப்புகளை மட்டுமே மின்னஞ்சலில் இணைத்து அனுப்ப முடியும். 25MB மேல் உள்ள கோப்புகளை இணைத்து அனுப்ப இயலாது.



பெரிய கோப்புகளை வலைத்தளம் மூலமாக பரிமாறிக்கொள்ளும் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றுதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கும் WeTransfer தளம்.

(உங்கள் தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.)

இந்த WeTransfer தலத்தில் இலவச மற்றும் கட்டண சேவை வசதி உள்ளது.
இலவச சேவையில் 2GB வரை உள்ள கோப்புகளை இணைத்து மின்னஞ்சல் மூலமாக மற்றவருக்கு அனுப்பலாம்.
கட்டண சேவை வசதியில் 20GB வரை உள்ள கோப்புகளை இணைத்து அனுப்பலாம்,

https://wetransfer.com/ என்ற தளத்திற்கு சென்று Take me to Free - ஐ கிளிக் செய்யவும்.


அடுத்த பக்கத்தில் I Agree கிளிக் செய்யவும். அடுத்து வரும் பக்கத்தில் Add Your Files பொத்தானை செலக்ட் செய்து 2GB வரை உள்ள கோப்புகளை இணைக்க முடியும். கோப்புகளை தேர்வு செய்தபிறகு அனுப்புனரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்களுடைய முகவரியை டைப் செய்து Transfer பொத்தானை அழுத்தவும். 

நீங்கள் தேர்வு செய்த கோப்புகள் அப்லோட் செய்யப்படும். பின்னர் உங்களுக்கு ஓர் மின்னஞ்சல் மற்றும் பெருநருக்கு ஒரு மின்னஞ்சல் WeTransfer மூலம் அனுப்பப்படும். அதில் நீங்கள் அப்லோட் செய்த கோப்புகளின் தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்துகொள்ளும் வழிமுறையும் இருக்கும். 

பெருநர் தனக்கு வந்த மின்னஞ்சலில் உள்ள பதிவிறக்க பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் கோப்புகள் கணினியில் பதிவிறக்கம் தொடங்கும். 

பெறுநர் கோப்புகளை பதிவிறக்கம் செய்தபின் அனுப்புனருக்கு கோப்பு தரவிக்கக்க பட்டுவிட்டது என்ற அறிவிப்பு மின்னஞ்சலும் கிடைக்கப்பெறும். 

இந்த வழிமுறையின் மூலம் 2GB வரை உள்ள கோப்புகளை இலவசமாக அனுப்பமுடியும். 

(உங்கள் தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.)


How to Send Large Files by Email Upto 2GB Free - 2GB வரை உள்ள கோப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக எளிமையாக அனுப்புவது எப்படி? How to Send Large Files by Email Upto 2GB Free - 2GB வரை உள்ள கோப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக எளிமையாக அனுப்புவது எப்படி? Reviewed by Vengat on November 22, 2017 Rating: 5

2 comments:

  1. Pretty good post. I just stumbled upon your blog and wanted to say that I have really enjoyed reading your blog posts. Any way I'll be subscribing to your feed and I hope you post again soon. Big thanks for the useful info
    send files

    ReplyDelete

Powered by Blogger.