தொலைந்ததுபோன ஆண்ட்ராய்டு மொபைலில் இருக்கும் முக்கிய தகவல்களை அழிப்பது எப்படி?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய சாதனம் மொபைல் போன். நமது அன்றாட பல வேலைகளுக்கு மொபைல் போன் அவசியம் தேவைப்படுகிறது. மொபைல் போன் நமது ஆறாவது விரலாகவே மாறிவிட்டது.

அடிக்கடி மொபைல் போன் தொலைத்துவிடும் நபர் அணைத்து நண்பர்கள் கூட்டத்திலும் கண்டிப்பாக இருப்பர். அதில் அவருடைய அதி முக்கியனான புகைப்படங்கள், வங்கி சார்த்த தகவல்கள், முக்கியமான சொந்த தகவல்கள் மற்றும் குறுந்செய்திகள் கட்டாயம் இருக்கும். 

(உங்கள் தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.)

தொலைந்த மொபைலில் இருக்கும் முக்கிய தகவல்களை யாரும் பார்க்காத, பயன்படுத்த முடியாத வகையில் பாதுகாக்க பல செயலிகள் உள்ளன. அவ்வாறு தொலைந்த மொபைலை லாக் செய்து அல்லது  தகவல்களை முழுவதுமாக அழிப்பது எப்படி என்பதை பற்றி பார்க்க போகிறோம்.


இம்முறையை  Find My Device எனும் அம்சத்தை கொண்டு செய்ய இருக்கின்றோம். Find My Device அம்சம் வேலை செய்ய உங்களது மொபைல்  இணையத்துடன் இணைத்திருக்க வேண்டும். உங்களது மொபைல் Find My Device  மூலம் கண்டறியப்பட்டால், மொபைல் இருக்கும் இடத்தை கூகுள் மேப் மூலம் பார்க்க முடியும்.

அதற்கான வழிமுறைகள்.
1. முதலில் https://www.android.com/ find என்ற தளத்திற்கு செல்லவேண்டும்.

2. தொலைந்த மொபைலில் பயன்படுத்திய ஜிமெயில் அக்கௌன்ட் லாகின் செய்யவேண்டும். 

3. அடுத்து வரும் திரையில் நீங்கள் பயன்படுத்திய மொபைல் சாதனைகள் காண்பிக்கப்படும்.  ஒன்றுக்கு மேற்பட்ட சாதனைகள் பயன்படுத்தி இருந்தால் தொலைந்த சாதனத்தின் பெயரை சரியாக தேர்வு செய்யவும். 

4.  இப்போது திரையில் தொலைந்த மொபைல் போன் பேட்டரி அளவு, இருக்கும் இடம் ஆகியவை காட்டப்படும். ஒருவேளை  காட்டப்படவில்லை என்றால் கடைசியாக இருந்த இடம் காண்பிக்கபடும்.

5. அடுத்ததாக Play Sound, Lock, Erase என்ற மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். 

6. Play Sound ஐ கிளிக் செய்தால் மொபைல் தொடர்ந்து 5 நிமிடங்கள் ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். (இந்த வசதி மொபைல்  சைலன்ட் மோடில் இருந்தாலும் நிச்சயம் வேலை செய்யும்.)

7. Lock கிளிக் செய்தால் மொபைலில் உள்ள தகவல்களை பார்க்க முடியாதவாறு மொபைல் திரை பூட்டப்பட்டுவிடும். 

8. இறுதியாக Erase கிளிக் செய்வதன் மூலம் மொபைலில் உள்ள தகவல்கள் அனைத்தும் நிரந்தரமாக அழிக்க்கப்பட்டுவிடும். 

(உங்கள் தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.)
தொலைந்ததுபோன ஆண்ட்ராய்டு மொபைலில் இருக்கும் முக்கிய தகவல்களை அழிப்பது எப்படி? தொலைந்ததுபோன ஆண்ட்ராய்டு மொபைலில் இருக்கும் முக்கிய தகவல்களை அழிப்பது எப்படி? Reviewed by Vengat on November 01, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.