ரூ.1349/- க்கு 1GB RAM 8GB Internal Memory 4G Android மொபைல்போன்.!!!

ஏர்டெல் நிறுவனம் அதன் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை "என் முதல் ஸ்மார்ட்போன்" என்ற திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது. செல்கான் நிறுவனத்துடனான கூட்டணியில் உருவாகியுள்ள இந்த செல்கான் ஸ்மார்ட் 4ஜி ஸ்மார்ட்போனானது ரூ.1349/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ளது.

தற்போது சந்தையில் ஸ்மார்ட்போன் குறைந்தபட்ச விலை ரூ.3000/- இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பை ஏர்டெல் நிறுவனம் இத்திட்டத்தை  அறிவித்துள்ளது.


ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும்ல் செல்கான்  ஸ்மார்ட் 4ஜி ஸ்மார்ட்போன் 4 அங்குல தொடுதிரையுடன், 1GB RAM, 1.3Ghz சக்தி கொண்ட Dual Core Processor உடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பும், இரண்டு சிம் ஸ்லாட் கொண்டுள்ளது.

மேலும் யூடியூப், பேஸ்புக் , வாட்ஸாப், உட்பட கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள அனைத்து பயன்பாடுகளுக்கும் முழு அணுகலை வழங்கும் இந்த சாதனம் மை ஏர்டெல் பயன்பாடு, வின்க் ம்யூசிக் மற்றும் ஏர்டெல் டிவி ஆகிய ப்ரீலோடட் பயன்பாடுகளும் கொண்டு வருகிறது.

முப்புறம் 2எம்பி அளவிலும், பின்புறம் 3.2எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த செல்கான் 4G ஸ்மார்ட் மொபைல் ஏர்டெல்லின் ரூ.169 மாதாந்திர திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நாள் ஒன்றிற்கு 0.5ஜிபி தரவுடன் வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் 28 நாட்கள் வழங்கும்.

ரூ.1349/- க்கு 1GB RAM 8GB Internal Memory 4G Android மொபைல்போன்.!!! ரூ.1349/- க்கு 1GB RAM 8GB Internal Memory 4G Android மொபைல்போன்.!!! Reviewed by Vengat on November 02, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.