இந்த ஸ்மார்ட்போன் யுகத்தில் இனைய பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்போல் இனைய வேகத்தியும், தரத்தையும் மேம்படுத்தும் ஆராய்ச்சிகளும் நடந்துகொண்டுதான் உள்ளது.
2G மற்றும் 3G நெட்ஒர்க் பயன்படுத்திய நாம் தற்போது 4G நெட்ஒர்க் பயன்படுத்த தொடங்கியுள்ளோம். வெகு விரைவில் 5G தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்படும்.
2G, 3G, 4G அனைத்துமே ஒரு தலைமுறை நெட்ஒர்க்கிலிருந்து அடுத்த தலைமுறை நெட்ஒர்க்கு மேம்படுத்தும்போது அதில் உள்ள வேகம், நிலைத்தன்மை, பாதுகாப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டு வருவது நாம் அறிந்ததே. G என்றதற்கான அர்த்தம் Generation ஆகும்.
1G முதல் தலைமுறை நெட்ஒர்க்.
முதல் தலைமுறை நெட்ஒர்க் 1980-ல் அறிமுகம் செய்யப்பட்டது. 2G நெட்ஒர்க் அறிமுகப்படுத்தும் வரை 1G என்ற சொல்லே பயன்பாட்டில் இல்லை. AMPS (Advanced Mobile Phone System) என்ற இந்த 1G அனலாக் தொழில்நுட்பம் கொண்டது. இந்த 1G-ல் குரல் அழைப்புகள் மட்டும் பயன்படுத்த முடிந்தது. அதுவும் உள்நாட்டுக்குள் மட்டுமே அழைப்புகளை செய்யமுடியும். 1G-யின் அதிகபட்ச வேகம் 2.4kbps. 1G-ல் குறைந்த குரல் அழைப்பு தரம், பாதுகாப்பு போன்ற குறைகள் இருந்தன.
2G இரண்டாம் தலைமுறை நெட்ஒர்க்.
1G நெட்ஒர்க்கு மாற்றாக 1991-ல் அறிமுகப்படுத்தபட்டது தான் 2G நெட்ஒர்க். 2G GSM (Global System for Mobile Communication) என்ற தொழில்நுட்பத்தில் வெளிவந்தது. 1G-ல் பயன்படுத்தப்பட்ட அனலாக் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டதும் இந்த 2G-ல் தான்.
கம்பியில்லா தொலைத்தொடர்பு மற்றும் மொபைல் மூலமாக இனைய வசதியை கொடுத்ததும் 2G-ல் தான். 2G-யின் அதிகபட்ச வேகம் 30 -50 kbps. மொபைல் மூலம் இணைய பயன்பாடு அதிகரிக்க தொடங்கியபோது 2G-க்கு மாற்றாக 1997-ல் மேம்படுத்தபட்டது 2.5G (GPRS) தொழில்நுட்பம். இந்த 2.5G-யின் அதிகபட்ச வேகம் 110 kbps. 2003-ல் மேலும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் 2.75G (EDGE) அறிமுகம் செய்யப்பட்டது. அதிகபட்சமாக 135 kbps வரையிலான இனைய வேகத்தை வழங்கியது.
(உங்கள் தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.)
3G மூன்றாம் தலைமுறை நெட்ஒர்க்.
ITU என்ற நிறுவனம் 3G தொழில்நுட்பத்தை ITM 2000 என்று 2000-ல் அறிமுகம் செய்தது. அதே ஆண்டில் CDMA 2000 என்ற தொழில்நுட்பமும் அறிமுகம் செய்யப்பட்டது. இது 153kbps வரை இனைய வேகத்தை வழங்கியது.
அடுத்த மேம்படுத்திய தொழில்நுட்பம் UTMS (Universal Mobile Telecommunications System) 384kbps வரை இனைய வேகத்தை மொபைல் நெட்ஒர்க்-ல் வழங்கியது.
அடுத்து வந்த HSPDA (High Speed Downlink Packet Access) 21mbps வரை அதிவேக இனைய இணைப்பை மொபைல் நெட்ஒர்க்-ல் வழங்கியது.
2G-ல் 2.5G மற்றும் 2.75G இருந்தது போலவே 3G-யிலும் 3.5G, 3.75G என்று அறிமுகம் செய்தனர். இதில் HSPDA+ என்ற 3.75G 84mbps அதிவேக இனைய இணைப்பை மொபைல் நெட்ஒர்க்-ல் வழங்கியது.
4G நான்காம் தலைமுறை நெட்ஒர்க்.
3G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய ITU நிறுவனம் தான் 2008-ல் 4G நெட்ஒர்க்-ஐ IMT Advanced என்று அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பம் 100mbps வரை இனைய வேகத்தை வழங்கியது.
4G யின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் தான் நாம் தற்போது பயன்படுத்தும் 4G LTE.
4G LTE யின் அடுத்த பதிப்பு 4G LTE Advanced. இந்த LTE Advanced-ல் இனைய வேகம் குறைந்தபட்சம் 100mbps-லிருந்தும், சிறந்த பாதுகாப்பு வசதியும் இருக்கும்.
5G ஐந்தாம் தலைமுறை நெட்ஒர்க்.
5G நெட்ஒர்க் தற்போது சோதனை அடிப்படையில் மட்டுமே உள்ளது. 5G-யின் குறைந்தபட்ச வேகமே 1Gbps முதல் அதிகபட்சமாக 10Gbps வரை இருக்கும். மேலும் மேம்படுத்தப்பட்ட பல புதிய தொழில்நுட்பங்கள் இதில் நிச்சயம் இருக்கும். அமெரிக்க ஐரோப்பா நாடுகளில் 5G-யின் தொழில்நுட்பம் மேம்பாட்டு போட்டியும் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. மொபைல் இனைய பயன்பாட்டில் 5G நிச்சயம் புரட்சியை ஏற்படுத்தும்.
(உங்கள் தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.)
2G, 3G, 4G & 5G விளக்கம். நமது மொபைல் நெட்ஒர்க் பற்றிய பயனுள்ள தகவல். 2G, 3G, 4G & 5G Explained.
Reviewed by Vengat
on
November 10, 2017
Rating:
No comments: